ஆதார் அட்டை இனி இதற்கெல்லாம் பயன்படாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Photo of author

By Jeevitha

பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம்: ஆதார் அட்டை ஒருவரின் வயதை தீர்மானிக்க அடிப்படையாக எடுத்துக்கொள்ள முடியாது. அது ஒருவரின் தனி மனித அடையாளம் மட்டுமே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய குடிமக்களின் முக்கிய ஆதாரமாக கருதப்படுவது ஆதார் அட்டை ஆகும். இது வங்கி, தபால் நிலையம், மருத்துவமனை, பத்திரபதிவு என பல இடங்களில் முக்கிய ஆதாரமாக கருதப்படுவது ஆதார் அட்டை. இதனால் தான் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, தொலைபேசி எண் என அனைத்து தகவல்களும் சரியாக இருக்க வேண்டும். இந்த நிலையில் 2015ம் ஆண்டு, ஹரியானாவின் ரோதாக்கை சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு திட்டத்தில் அவரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கினை வைத்து உயிரிழந்தவரின் பள்ளி சான்றிதழில் 01.10. 1970 என்ற பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு ரூ.19,35,000 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து இன்சூரன்ஸ் நிறுவனம் பஞ்சாப் -ஹரியானா உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் உயிரிழந்தவரின் ஆதாரில் 01.01. 1969 என உள்ள பிறந்த தேதியை வைத்து இன்சூரன்ஸ் பணத்தை ரூ.9,22,000 குறைத்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து அவர் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில்  நீதிபதிகள் 2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டம் 94-வது பிரிவின் படி பார்த்தால், பள்ளி இறுதி (எஸ்.எஸ்.எல்.சி.) சான்றில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில் தான் ஒருவரது வயது தீர்மானிக்கப்பட வேண்டும் என  பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர். இதன் அடிப்படையில்  ஆதார் அட்டை ஒருவரது அடையாளத்தை உறுதி செய்யவே பயன்படுத்த முடியும் எனவும் பிறந்த தேதியை ஆதாரமாக கருத முடியாது எனவும் தீர்பளித்துள்ளது.