குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழடன் ஆதார் எண்ணை பெறலாம்! அமலுக்கு வருகிறது புதிய திட்டம்!

Photo of author

By Sakthi

ஆதார் 12 இலக்கங்கள் கொண்ட என் ஆனாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் முதல் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. வங்கி சேமிப்பு கணக்கு ஆரம்பிப்பது முதல் அரசு மானியங்கள் வங்கி கடன் பெறுவது என்று எதை செய்தாலும் ஆதாரம் இல்லை என்றால் ஒன்றும் நடக்காது.

குறிப்பாக 650 மாநில அரசிட்டங்கள் 315 மத்திய அரசின் திட்ட பணிகளை அடையாளம் காணவும் அரசு பலன்களை பெறுபவர்கள் தகுதியானவர்களா? என்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஆதார் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இப்படி மக்களின் இன்றியமையாத மற்றும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிப் போன குழந்தைகள் முதல் பெரும் விதத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு விரிவுபடுத்தி இருக்கிறது.

இந்த வரிசையில் தான் தற்போது இந்தியாவில் இருக்கின்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஆதார் எண் பெரும் நடைமுறையை எளிதாக்கும் விதத்தில் குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் ஆதார் எண் பெறும் நடைமுறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாட்டில் இருக்கின்ற 16 மாநிலங்களில் தற்போது பிறப்புச் சான்றிதழ் உடன் ஆதார் வழங்கும் நடைமுறை இருக்கின்ற நிலையில் அடுத்த சில மாதங்களில் அனைத்து மாநிலங்களும் இது கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

நாட்டில் எங்கு குழந்தை பிறந்தாலும் அந்தந்த மருத்துவமனை மூலமாகவே பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடைமுறை இருக்கிறது இதன் பிறகு எப்போது நமக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போது தான் ஆதார் அடையாள அட்டை எடுப்பதற்கு பெற்றோர்கள் செல்வார்கள். குறிப்பாக மூன்று வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு மற்றும் ரேஷன் கார்டில் பிறந்த குழந்தையின் பெயர் சேர்ப்பதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அப்போதுதான் சில பெற்றோர்கள் ஆதார் மையங்களை தேடி செல்வார்கள்.

இதனால் சென்ற வருடத்தில் புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட சிறார்களின் எண்ணிக்கை மட்டும் 4 கோடியாக இருந்துள்ளது. இப்படி ஒவ்வொரு வருடமும் ஆதார் என்னை பெறுவதற்கான பதிவுகள் அதிகரித்து வருகிறது இப்படியான சூழ்நிலையில் தான் இந்தியாவில் இருக்கின்ற பெற்றோர்கள் ஆதார் எண்ணை எளிய முறையில் பெறுவதற்கான நடைமுறையை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது மத்திய அரசு.

அதன் அடிப்படையில் குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகளை இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மிக விரைவில் இது அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

நாட்டில் பதினாறு மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் தற்போது வரையை குழந்தைகளுக்கு எடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டை அவர்களின் பெற்றோரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு மக்கள் தொகை தகவல் மற்றும் புகைப்படத்தின் அடிப்படையில் பிராசஸ் செய்யப்படுகிறது. இதன் பின்னர் 5 மற்றும் 15 வயது ஆனதும் விரல்கள் கருவிழி மற்றும் முக புகைப்படம் என அவர்களின் பயோமெட்ரிக் அப்டேட் செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது