VCK-DMK: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் வராமல் இருக்க திமுக தான் காரணம் ஆதவ் அர்ஜூனா குற்றச்சாட்டு.
சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுக மற்றும் விசிக கூட்டணிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் பேசியதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து 6 மாத காலத்திற்கு திருமாவனால் இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் ஆதவ் அர்ஜுனா.
இவர் தற்போது, தனியார் தொலைக்காட்சியில் அளித்த போட்டி ஒன்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவிற்கு திருமாவளவன் பங்கேற்பது என்பது ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்று ஆகும். தவெக விஜய் அவர்களும் இந்த புத்தக வெளியிட்டு விழாவில் பங்கு பெற இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் திமுகவிற்கு எதிராக விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பதால் திருமா புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்லக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து திருமாவிடம் அமைச்சர் எ. வ. வேலு சொல்லி இருக்கிறார் என்றும் கூறினார். மேலும், புத்தக வெளியிட்டு விழாவில் அரசியல் முரண் பார்ப்பதா என்று கேள்வி எழுப்பினர்.
திமுக கட்சிக்கு எதிரான கோட்பாடு கொண்ட பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கருணாநிதி தொடர்பான விழாவிற்கு வந்து கலந்து கொண்டாரே அப்போது உங்கள் கட்சி கோட்பாடுகள் என்ன ஆயிற்று என கோபமுடன் ஆதவ் அர்ஜுனா பேசி இருந்தார்.