ஆதவ் அர்ஜூனா விசிக-வில் இருந்து விலகல்!! அவருடைய செயல் நியாயமானது திருமாவளவன் விளக்கம்!!

Photo of author

By Sakthi

ஆதவ் அர்ஜூனா விசிக-வில் இருந்து விலகல்!! அவருடைய செயல் நியாயமானது திருமாவளவன் விளக்கம்!!

Sakthi

Aadhav Arjuna has completely left the vck party

vck: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து முழுமையாக விலகிய ஆதவ் அர்ஜூனா.

திமுகவுடன் கூட்டணியில்   இருக்கும் மிக முக்கியமான கட்சி விசிக தான். வட தமிழகத்தில் தலித் மக்களின் வாக்குகளை திமுகவிற்கு கன்வெர்ட் செய்வது விசிக கட்சி ஆகும்.  ஆனால், அதற்காக அதிகாரத்தையும் தேர்தலில் 2 தொகுதிகளுக்கு மேல் திமுக விசிக-வுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு  நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக திருமாவளவனால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் நிலைபாடுகள் திமுக கூட்டணிக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது என்றும், விஜய் தவெக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்கிறார்.

குறிப்பாக அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுக நேரடியாக விமர்சனம்
செய்து இருந்தார். எனவே, கடந்த வாரம் விசிக கட்சியில் இருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.  இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா விசிக கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக தகவல் வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து  விசிக திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.

அதில், ஆதவ் அர்ஜூனா குரல் நியாயமானதாக இருக்கலாம், அவரது கோரிக்கைகள் நியாயமானதாக இருக்கலாம். ஆனால், கட்சி கட்டுப்பாட்டிற்கு இணங்காமல் செயல்பட்டு  வருகிறார். அவரை நீக்குவது என்பது எங்கள் நோக்கம் இல்லை கட்சியின் நடைமுறைக்கு உடன் பட்டு செயல்படுவது தான் அதற்க்குதான்  இடைநீக்கம் செய்து இருக்கிறோம் என்று கூறினார்.