TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் தவெகவினர் இது திமுக அரசின் சதி என்றும், திமுகவினர் இது தவெகவின் ஒழுங்கற்ற அரசியல் நிலைப்பாடு என்றும் மாறி மாறி குறை கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.
மதியழகனை கைது செய்த போலீசார், மீதமிருக்கும் தலைவர்களையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுன் டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தையும் சாடியிருந்தார்.
இது குறித்து பேசிய அவர் நேபாளம், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் ஏற்பட்டதை போல தமிழகத்திலும் புரட்சி வெடிக்க வேண்டுமேன, கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அனைத்திற்கும் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்நோக்கி காத்திருப்பீர்களா? என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நீதிபதி கூறியிருந்தார்.