நெருங்கும் தீபாவளி! பாரம்பரிய அதிரசம் ரெசிபி செய்ய ஈசி டிப்ஸ்!!

0
206

நெருங்கும் தீபாவளி! பாரம்பரிய அதிரசம் ரெசிபி செய்ய ஈசி டிப்ஸ்!!

பாரம்பரிய ஓர் இனிப்பு பண்டம் என்னவென்றால் சற்றும் யோசிக்காமல் அதிரசம் என்று கூறலாம்.அக்காலத்தில் தீபாவளி என்றாலே நமது பாட்டிமார்கள் அதிரசத்தை சுட்டு பானையில் அடுக்கி வைப்பது உண்டு. ஆனால் இக்காலத்திலையோ பேக்கரியில் விற்கும் பல விதமான இனிப்பு பண்டங்களை பேக்கரியில் வாங்கி குவிக்கின்றோம்.
ஆனால் எத்தனை ஸ்வீட் வந்தாலும் இந்த அதிரசத்திற்கு ஈடாகுமா?

வாங்கல் உங்கள் நாவை சுவைக்கும் அதிரசம் ரெசிபி எவ்வாறு செய்வது என்பதனை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி: 2 கப்

வெல்லம் : 1 1/2 கப்

ஏலக்காய் மற்றும் சுக்கு தேவைக்கேற்ப

தண்ணீர் : அரைக்கப்

எண்ணெய்: 1/2 – 3/4 லிட்டர்

செய்முறை:

நல்ல தரமான பச்சரிசியை இரண்டு கப் அளவு எடுத்து தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி அதனை 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பிறகு தண்ணீரை வடிகட்டி நன்றாக உலர்த்த வேண்டும்.

அதாவது அரிசியை கையில் பிடித்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாத வண்ணம் உலர்த்த வேண்டும்.

பிறகு இதனை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அதாவது அரைத்த மாவை சலித்து சலித்து மீண்டும் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.மாவு நன்றாக நைசாக இருக்க வேண்டும்.

வெள்ளத்தை சிறிது சிறிதாக நுணுக்கி ஒன்றைக் கப்பளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வானிலில் அரை கப் தண்ணீர் ஊற்றி நுணுக்கி வைத்த வெள்ளத்தை போட வேண்டும்.தண்ணீர் சூடேறி வெள்ளம் கரைந்ததும் அதனை வடிகட்டி மீண்டும் வானிலில் விட்டு பாகு காய்ச்ச வேண்டும்.

அதாவது இந்த பாகானது உருட்டு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.இதனை எவ்வாறு கண்டுபிடிப்பது என்றால் பாவை சிறிது எடுத்து ஒரு கப் தண்ணீரில் போட வேண்டும் அந்தப் பாகானது தண்ணீரில் மூழ்காமல் கையில் உருண்டையாக எடுக்க வந்தால் அதிரசத்துக்கு தேவையான பாகுபதம் வந்துவிட்டது என்ன அர்த்தம்.

பாகு உருட்டு பதம் வந்தவுடன் நுணிக்கவைத்த ஏலக்காய் மற்றும் சுக்கு பொடியை தூவி பிறகு அரைத்து வைத்த மாவையும் சிறிது சிறிதாக கொட்டி கட்டி இல்லாமல் நன்றாக கிளறி விடவும்.

இந்தக் கிளறிய மாவு கலவையை 24 மணி நேரம் மூடி அப்படியே வைத்து விட வேண்டும்.

24 மணி நேரம் கழித்து மாவு நன்றாக இறுகி இருக்கும் இதனை உள்ளங்கையில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மேலே கூறிய அளவுகளை சரியாக பயன்படுத்தினால் அதிரசம் உடையாமல் நன்றாக வரும்.

Previous articleதீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? 
Next articleDhanteras – தந்தேரஸ் தினம் 2022 : தன்வந்திரி பூஜை! புதியதாக தங்கம் வாங்க நல்ல நேரம்