திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்!

Photo of author

By Sakthi

திருமணத்தடை நீக்கும் ஆடிப்பூர விரதம்!

Sakthi

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம் என அனைவருக்கும் தெரியும். ஆனால் அம்மனுக்குரிய விசேஷ தினங்களில் முக்கியமான ஒன்று ஆடிப்பூரம். உமாதேவி அவதரித்த நாள், உலக மக்களை காப்பாற்றுவதற்காக அம்பாள் சக்தியாக வருவெடுத்த தினம் ஆடிப்பூரம்.

அதோடு இந்த ஆடிப்பூரத்தில் தான் ஸ்ரீ ஆண்டாள் பிறந்ததாக சொல்லப்படுகிறது. பூரம் என்பது சுக்கிரனின் நட்சத்திரம் சுக்கிரன் மனா வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பவன்.

ஆணுக்கு மனைவியைப் பற்றியும், பெண்ணுக்கு மணவாழ்க்கையை பற்றியும் குறிப்பு காட்டுவது இந்த சுக்கிரன் தான். அதோடு சுக்கிரன் இன்பம், அன்பு, பாசம், காதல், சுகபோகம், அழகு, ஆடம்பர வாழ்க்கை, என்று அனைத்து லவ்கீக இன்பங்களையும் வழங்குவார் என சொல்லப்படுகிறது.

இன்பம் என்ற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலை நமக்குள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பவர் என்பதால் ஒருவர் ஜாதக கட்டத்தில் சுக்கிரன் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம்.

சுய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜயோக பலன்கள் ஏற்படும்.

அதேநேரம் சுக்கிரன் சுய ஜாதகத்தில் வலுவிழந்திருந்தால் அல்லது பாவிகளுடன் தொடர்பு கொண்டிருந்தால் திருமணம் தடைபடும். சுகபோகங்கள் குறைவு ஏற்படும். அழகு மங்கும், ஆடம்பர பொருட்கள் சேர்க்கை இருக்காது. பொருள் வரவில் தடை மற்றும் தாமதம் இருக்கும்.

தங்களுடைய ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்திருப்பவர்கள் ஆடிப்பூர நாளில் விரதமிருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிரதோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆடிப்பூர நாள், அன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார், திருமொழி, திருப்பல்லாண்டு, உள்ளிட்ட பாசுரங்கள் பாடப்படும். இதன் காரணமாக, ஆண்டாள் மனம் குளிர்ந்திருப்பா.ர் அந்த நேரத்தில் ஆண்டாளை வழிபட்டால் அனைத்து பிரார்த்தனைகளும் நிறைவேறும் என்கிறார்கள்.

அதேபோல அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல இயலாத இளம் கன்னிப் பெண்கள் வீட்டில் ஆண்டாள் புகைப்படத்தை வைத்து மனதை ஒருநிலைப்படுத்தி திருப்பாவை, நாச்சியார், திருமொழி, திருப்பல்லாண்டு உள்ளிட்ட பாசுரங்கள் பாடினால் திருமணத்தடை நீங்கும். மனம் விரும்பிய மணாளனை அடையலாம்.

அன்றைய தினம் அம்மனுக்கு சாற்றப்படும் வலையல்களை நீங்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உள்ளிட்ட சகல நலன்களையும், நீங்காத செல்வத்தையும் ,பெறலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.