அம்மா குடிநீருக்கு பதிலாக ஆவின் குடிநீர்! பால்வளத் துறை எடுத்த அதிரடி முடிவு!

Photo of author

By Sakthi

அதிமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் பல நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு செய்து வந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

அதாவது அம்மா உணவகம் அம்மா குடிநீர் போன்ற பல நலத்திட்டங்களை செயல்படுத்திருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதில் அம்மா உணவகம் ஏழை எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வயிறார சாப்பிடும் வகையில் குறைந்த விலையில் உணவுகளை வழங்கியது.

அதேபோன்று அம்மா குடிநீர் என்ற திட்டத்தின் மூலமாக 10 ரூபாய்க்கு உயர்தர மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பல நல்ல திட்டங்களை ரத்து செய்து உத்தரவிடபட்டது.

இந்த நிலையில் தற்சமயம் அம்மா குடிநீர் திட்டத்தை போல ஆவின் குடிநீர் திடத்தை செயல்படுத்துவதற்கு பால்வளத்துறை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆவின் நிறுவனத்திற்கு பால் பாக்கெட் தயாரிக்கப்படும் 28 பண்ணைகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்படவிருக்கின்றன.

இங்கே முதல் கட்டமாக ஒரு லிட்டர், அரை லிட்டர், தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படவிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. ஆவின் பாலகங்கள், குளிர்பான கடைகளில் அவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவிருக்கின்றன.