தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம்!

0
199
Abdul Kalam
Abdul Kalam

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம்

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செனாய் நகரை சேர்ந்த அசோக் குமார்.இவர் கொரோனா பொதுமுடக்க காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

2020 ஆம் ஆண்டில் இந்திய நாடு வல்லரசு நாடக திகழ வேண்டும் என கனவு கண்டவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.கடந்த ஜூலை 27 2015 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உயிரிழந்தார்.

Abdul Kalam

அவரது நினைவு நாளை நாம் நினைவு கொள்ளுமாறு 2020 ஆம் ஆண்டை நமது லட்சிய ஆண்டாக கருதிய மாபெரும் மாமனிதர் அப்துல் கலாம் ஐய்யா அவர்களின் படத்தை 2020 மர விதைகளை கொண்டு அப்படத்தை வரைந்துள்ளார் அசோக் குமார்.

“கொடிக்கா விதை, சீத்தாப்பழ விதை, குதிரைக்குழம்பு விதை, சீயக்காய் விதை, வேங்கை மரம், புளிய மரம்” உள்ளிட 7 வகையான விதைகளை கொண்டு 2020 விதை முலம் அப்துல்கலாம்  ஐய்யா அவர்களின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.

அசோக்குமாரின் இந்த படைப்பு அனைத்து தரப்பினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Previous articleவேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்
Next articleமுதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா