ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு கதறும் சிறுபான்மையினரின் அமைப்புகள்!

0
180

உபா சட்டத்தையும் என்ஐஏ அமைப்பையும் பயன்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் பாஜகவை கண்டிக்கும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் பல்வேறு இயக்கங்களை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுக் கொண்டார்கள்.

அப்போது ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டசபை உறுப்பினருமான அப்துல் சமது, சாதி பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என்று பேசுவது தான் சனாதனம். மனிதனைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்ற சித்தாந்தம் தான் சனாதான சித்தாந்தம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜக நுழைய முடியும் என்ற கனவு பகல் கனவு தான் என்று தெரிவித்திருக்கிறார்.

மாநில காவல்துறையினரின் அதிகாரத்தை பறிக்கும் அமைப்புதான் என் ஐ ஏ எனவும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் அதாவது உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 2.2% தான் குற்றவாளிகளாக தண்டனை பெற்றுள்ளார்கள். இது கருப்பு சட்டம். தடா, பொடா சட்டத்தை விட கடுமையான சட்டம் என்று தெரிவித்தார்.

காந்தியை கொலை செய்த கூட்டத்தை உபா சட்டத்தில் கைது செய்வார்களா? மாட்டுக்கறி என்ற பெயரில் கொலை செய்த கும்பலை கைது செய்ய முடியுமா? சிறுமி ஆஷிபாவை பலாத்காரம் செய்தவர்களையும் கோவிந்த் பன்சாராவை, கௌரி லாங்கேஷை கொலை செய்தவர்களை கைது செய்வார்களா? யாரை கைது செய்ய இந்த சட்டம்? மக்களுக்காக உழைக்கக்கூடியவர்கள் உள்ளிட்டோரை கைது செய்வது தான் உபா சட்டம் என்று தெரிவித்தார்.

அதோடு நாட்டின் ஒரே தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ் தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குண்டு வெடிப்புகளை நடத்தும் மாலேகான், மதினா பள்ளிவாசல் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளில் இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் பர்க்யா சிங் தாகூர் கோட்சேவை தேசியவாதி என்று தெரிவிக்கும் பாசிச சிந்தனையை உருவாக்குகிறார்கள் பாஜகவை சார்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்றுக் கொண்டார்கள் ஆர்எஸ்எஸ் தரப்பு பங்கேற்றார்களா? என்று கேள்வி எழுப்பியெள்ளார். ஆர் எஸ் எஸ் போராடியவர்கள் அல்ல நாட்டை காட்டிக் கொடுத்தவர்கள் என்று குறிப்பிட்ட அவர் ,இந்து ராஷ்டிரயம் என்பதை உருவாக்கி அதில் சமூக நீதி இருக்காது, கல்வி, வேலை வாய்ப்பை ஒழிக்கும் வேலையை செய்வார்கள் என்று தெரிவித்தார்.

ஆர் எஸ் எஸ் அமைப்பை போன்ற ஒரு பாசிச அமைப்பை ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள். இது இந்து முஸ்லிம் பிரச்சினை கிடையாது ஒவ்வொரு இந்தியரும் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனையாகவே எதிர்த்து போராட தயாராக வேண்டும். நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பேட்டியும், பாபர் மசூதி தீர்ப்பும் எடுத்துக்காட்டுகிறது. மக்களின் ஜனநாயகத்தின் ஒன்றாக பாசிசம் விழும் என்று தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டிருக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பை ஒரு கலவர அமைப்பாக உருவகப்படுத்த தமிழகம் முயற்சிக்கிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்துமத கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழகத்தில் தலை தூக்கி விட்டால் சிறுபான்மையினர் செய்யும் சில பல சட்டவிரோத செயல்களை செய்ய முடியாது என்பதை கருத்தில் கொண்டு தான் அவர்கள் ஆர் எஸ் எஸ் அமைப்பு தமிழகத்தில் நுழைவதை தடுக்க நினைக்கிறார்கள்.

அதோடு தீவிரவாதம் என்ற செயல் தமிழகத்தில் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது என்பது சமீபத்திய என் ஐ ஏ சோதனையில் தான் பொது மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது. அப்படியானால் தமிழகத்தில் என்ன நடக்கிறது மறைமுகமாக எதை நோக்கி தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழகத்தை எதை நோக்கி இங்குள்ள தலைவர்கள் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படியே இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Previous articleஓபிஎஸ் அதிரடியால் அதிர்ந்து போன எடப்பாடி பழனிச்சாமி!
Next article20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!