உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெற விரும்பினால் ஒரு சிறப்பான நேரம் ஒன்றை பயன்படுத்தினால் நிச்சயம் பெற முடியும். அந்த நேரம் தான் அபிஜித் நட்சத்திரம் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நேரம். இந்த நேரத்தை நாம் பயன்படுத்தினால் நமது வாழ்க்கையில் பல்வேறு அதிர்ஷ்டங்களையும், ஒரு நல்ல வாழ்க்கையையும் பெற முடியும் என்பது உறுதி.
இது ஒரு ரகசியமான சக்தி வாய்ந்த நேரம் ஆகவும் கருதப்படுகிறது. ஜித் என்றால் ‘வெற்றி’ என்று பொருள். அபிஜித் என்றால் ‘வெற்றியை கொடுக்கும் நேரம்’ என்று பொருள். இந்த அபிஜித் என்பது பலருக்கும் தெரியாத மறை நேர நட்சத்திரமாகும். 27 நட்சத்திரங்களில் இந்த நட்சத்திரம் அடங்காது. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த நட்சத்திரமாக இது கருதப்படுகிறது.
பண்டைய காலத்தில் இந்த நட்சத்திரம் வெற்றியை குறிக்கும் ஒரு சக்தி என்று பாரம்பரிய நூல்கள் கூறுகின்றன. உத்திராட நட்சத்திரத்திற்கும் திருவோண நட்சத்திரத்திற்கும் இடையே இடம் பெற்றிருக்கக் கூடிய சூட்சம நட்சத்திரம் தான் இந்த அபிஜித் நட்சத்திரம்.
28 வது நட்சத்திரமாக இருக்கும் இந்த சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரத்தை மனிதர்களிடம் கொடுத்தால் அவர்கள் இதை தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக, கிருஷ்ண பகவான் இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் மறைத்து வைத்ததாக நமது சாஸ்திரத்தில் உள்ள புராண கதைகள் கூறுகிறது.
உத்திராட நட்சத்திரத்திற்கும், திருவோண நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட 24 நிமிடங்கள் தான் இந்த அபிஜித் நட்சத்திரம் என்று கூறுகின்றோம். இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும். இந்த நட்சத்திர நேரத்தில் எந்த ஒரு தோஷமும் கிடையாது.
அதாவது ராகு காலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த ஒரு தடங்கலும் கிடையாது. இந்த அபிஜித் நட்சத்திரம் ஆனது 25. 3. 2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:14 மணி முதல் 4:38 மணி வரை உள்ளது.
இந்த நேரத்தில் நமது வேண்டுதல்களை இறைவனிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளலாம்.
நமது வீட்டின் பூஜை அறையில் இரண்டு தீபங்களை ஏற்றி வைத்து விஷ்ணு பகவானை மனதார நினைத்துக் கொண்டு, நமது வேண்டுதல்களை வேண்டிக் கொள்ளலாம். இந்த நேரத்தில் இறைவனை வழிபட்டோம் என்றால் நமது வாழ்க்கையில் வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும்.
அபிஜித் நட்சத்திர முகூர்த்தம் என்பது தினமும் 11: 45 மணி முதல் 12: 15 மணி வரை இருக்கும். ஆனால் அபிஜித் நட்சத்திரம் என்பது மாதத்திற்கு ஒரு முறை தான் வரும். அந்த அபிஜித் நட்சத்திரத்தின் பொழுது நமது வேண்டுதல்களை விஷ்ணு பகவானிடம் கூறுவதன் மூலம் நமது அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். இந்த பிரார்த்தனையின் பொழுது கூற வேண்டிய மந்திரம் ஒன்று உள்ளது.
அபஜித் ஸ்துதி:
“அபஜித ஆகமாந்துதீர
அபாஜிதாம்பர நக்ஷத்திரானாம்
நாததீய ஜோதினாம்
நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம் பவதவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!”
இந்த துதியை பாடிக்கொண்டும் நமது வேண்டுதல்களை கூறலாம்.