மின் இணைப்பில் முறைகேடு! அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு!

0
186

தமிழகத்தில் பல வணிக நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதோடு கடைகள், வீடுகள், உள்ளிட்ட பகுதிகளில் ஒரே பெயரில் பல மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக பல புகார் வந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி முறைகேடுகளில் ஈடுபடுவதால் மின்சார வாரியத்திற்கு மிகப்பெரிய இழப்பு உண்டாகிறது. ஆகவே இது குறித்து மின்சார வாரிய வணிக பிரிவு தலைமை பொறியாளர் அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது வீடு, வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற மின்சார இணைப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன? ஒரே பயன்பாட்டிற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருக்கின்றனவா? என்பது தொடர்பாக அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலும், ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அனைத்து மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த சமயத்தில் 50க்கும் அதிகமான பகுதிகளில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு முரண்பாடான இணைப்பு வழங்கப்பட்டு இருப்பது தெரியவகிர்ந்திருக்கிறது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பொது சேவை மின்சார இணைப்புகள் மற்றும் மற்ற சேவைக்கான மின்சார இணைப்புகளை கண்டறியவேண்டும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்திருக்கின்ற அனைத்து விதிமுறைகளையும் கவனமாக பின்பற்ற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல இணைப்புகளை பெற்று முறைகேடாக பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பி மூன்று மாத காலம் அவகாசம் வழங்கி அதன் பிறகு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஇங்கிலாந்தை புரட்டிப்போடும் நோய்த்தொற்று பரவல்!
Next articleமேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்?