கனரக வாகனத்தை முந்த நினைத்த நபர் எதிர்பாராமல் வந்திடித்த வாகனம்! கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன உயிர்!

Photo of author

By Sakthi

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துர்க்கையம்மன் கோவில் தெருவில் துரைராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்த வேலையின் காரணமாக தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி பயணம் செய்தார்.

அப்போது முன்பே சென்று கொண்டிருந்த கனரக லாரியை முந்தி செல்வதற்கு முயற்சி செய்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், சங்கராபுரத்தை சார்ந்த நீலமேகம் என்பவர் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்துகொண்டிருந்தார். இதனைதொடர்ந்து இருவரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக சொல்லப்படுகிறது.

எதிர்பாராத விதத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் துரைராஜ் பக்கவாட்டில் வந்த கனரக லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்திருக்கிறார்.

இது தொடர்பாக தகவலறிந்த வாலாஜாபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீலமேகத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையை சார்ந்தவர்கள் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

சென்னை உள்ளிட்ட மிகப் பெரிய நகரங்களில் நெடுஞ்சாலை தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனாலும் இதுபோன்ற துயர சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது.இதற்கு காரணம் என்னதான் சாலைகள் விரிவாக போடப்பட்டிருந்தாலும் அதில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை யாரும் சரியாக பின்பற்ற வில்லை என்பதே உண்மை.

மேலும் மேலைநாடுகளில் போடப்பட்டிருக்கும் போக்குவரத்து வசதிக்கான சாலைகளை போல இந்தியாவிலும் போக்குவரத்து வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.