பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி!
தென் அமெரிக்க நாடான பெருவின் அப்ருனிமெக் மாகாணத்தின் ஹடபம்பாஸ் நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தின கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களை அழைத்து வருவதும், அழைத்து செல்வதும் அந்த தொழிற்சாலையின் பேருந்துதான். இது எப்போதும் நடைபெறும் வழக்கமான ஒன்று தான்.
இந்நிலையில் அந்த காப்பர் சுரங்கத்தில் நேற்றும் பணி முடிந்தவுடன் 18 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
அதன் காரணமாக 200 மீட்டர் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் 15 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள மூன்று பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உலகம் முழுவதுமே விபத்துக்களும், உயிர் பலிகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் மூலம் நாம் அனைவருமே மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நாம் எவ்வளவு நாள் இருப்போம் என்றே தெரியாத நிலை நீடித்து வருவதால், இருக்கும் வரை அனைவருடனும் மகிழ்ச்சியாக இருப்போம். உறவினர்களுக்கு அழைத்து பேசுவோம். அன்பை பகிர்வோம். மகிழ்ச்சியாக இருப்போம்.