திமுகவில் நிர்வாக வசதிக்கு ஏற்றவாறு மாவட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக மாநில நீர்வளத் துறை அமைச்சரும், திமுகவின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் திமுக நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் சரியாக நடைபெறுவதற்காக மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டிருக்கிறது எனவும் கூறியிருக்கிறார்.
அதனடிப்படையில், மதுரை தெற்கு மாவட்டம், தர்மபுரி கிழக்கு மாவட்டம், தர்மபுரி மேற்கு மாவட்டம், விழுப்புரம் மத்திய மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருப்பூர் தெற்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தஞ்சை வடக்கு மாவட்டம், தர்மபுரி மாவட்டம், விருதுநகர் வடக்கு மாவட்டம், திருநெல்வேலி மத்திய மாவட்டம், திருவள்ளூர் மத்திய மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் ஒன்றியங்கள் கூடுதலாக பிரிக்கப்பட்டிருக்கிறது எனவும் அவர் கூறியிருக்கிறார்.