ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றங்கள்!! ஆதார் கார்டை புதுப்பிக்கவில்லை எனில் பொருட்கள் வாங்க முடியாது!!
தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் பல சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படும். இதனால் உணவு வழங்கல் துறை சில புதிய வழிமுறைகளை நடைமுறை படத்தை உள்ளது.
புதிய நடைமுறைகள்:
1) ஆதார் கார்டுகள் புதுபிக்க படாமல் இருந்தால் ரேஷன் கடைகளில் கைரேகை விழாது.
2) பயோமெட்ரிக் முறையில் கைரேகை சரியாக விழாவிட்டால் பொருட்கள் வழங்கப்படாது.
3) 18 வயதிற்கு கீழ் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாது.
4) ரேஷன் அட்டைதாரர்கள் இன் கைரேகை தவறாக காட்டினாள் 10 நிமிடம் கழித்து தான் மீண்டும் அந்த ரேஷன் அட்டைக்கு பில் போட முடியும்.
5) குரானா தடுப்பு நடவடிக்கையான முகக் கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை கடைப்பிடிக்காதவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது.
6) ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் தேதி குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிற்கு தகுந்தாற்போல தேதிகள் அறிவிப்பு பலகையில் குறிக்கப்பட்டிருக்கும். அதற்கு தகுந்த தேதிகளில் சிரமமின்றி பயனாளர்கள் வாங்கி செல்லலாம்.
7) அனைவருக்கும் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் இந்த மாத இறுதிக்குள் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
8) ஆதார் அட்டையை புதுப்பிக்காத பட்சத்தில் ரேஷன் கடைகளில் பில் போட முடியாது.
9) கைரேகை சரியாக பதிவாகாத அட்டைதாரர்கள் இ-சேவை மையங்களில் தங்களது புதிய கைரேகையை ஆதார் அட்டையுடன் பதிவு செய்ய வேண்டும்.
போன்ற பல்வேறு வழிமுறைகள் இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் கடைபிடிக்கப்படும்.