ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த அந்த நபர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

Photo of author

By Sakthi

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கின்றார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அமைச்சர் துரைக்கண்ணு மரணம் சம்பந்தமாக அவதூறான கருத்து தெரிவித்த ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் அமைச்சர் மரணத்தில் அரசியல் லாபம் தேடும் அவருடைய செயல் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருக்கின்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ஒரு அறிக்கையில், தமிழக வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்து வந்த துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது மாற்று கட்சியினர் கூட அவர் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதையே திரும்பி வந்தார்கள்.

ஆனாலும் அவருடைய கட்சித் தலைமையோ அமைச்சரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த, பலகோடி ரூபாய் பணத்தை திரும்ப வாங்குவதற்காக அவருடைய குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்கு உத்தரவாதம் கிடைத்த பின்னரே அமைச்சருடைய மரண அறிவிப்பு வெளியிடப்பட்டது எனவும் அதிர்ச்சி தரும் செய்திகளை நாளேடுகளிலும், புலனாய்வு பத்திரிக்கைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.