அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!  இனி வகுப்பறையில் இதனை உபயோகிக்க கூடாது!!

0
224
Action order for government school teachers!! Do not use it in the classroom anymore!!
Action order for government school teachers!! Do not use it in the classroom anymore!!

 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!  இனி வகுப்பறையில் இதனை உபயோகிக்க கூடாது!!

தமிழ்நாடு அரசு மாணவர்களின் கல்வி ஆற்றலை மேம்படுத்த புதிய உக்திகளை கையாண்டு வருகிறது.அதில் வெற்றியும் கண்டு உள்ளது.அந்த வகையில் சிறப்பான திட்டமாக பார்க்க கூடிய பள்ளி மாணவர்களுக்ககா ஸ்மார்ட் கிளாஸ் ரூம் & இணையதள வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் ஒவ்வொரு ஆரம்பப் பள்ளி, மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டிலும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டு வருகின்றது.

தற்பொழுது அதில் பின்பற்றப்பட வேண்டிய சில விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.அதன்படி ,இனி வகுப்பறைகளை கண்காணிக்க தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டும்.மேலும் ஆசிரியர்கள் தங்களது சொந்த பயன்பாட்டுக்காக கணினியை மற்றும் இணைய சேவையை உபயோகிக்க கூடாது என தெரிவிக்கப்படுள்ளது.கணினியில் இருக்கும் அனைத்து யுஸ்பி போர்ட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன.வகுப்பறைகளில் நிகழும் அனைத்து செயல்பாடுகளும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

அதற்கடுத்து மாணவர்கள் சாப்பிட்ட கூடிய எந்த ஒரு பொருட்களையும் வகுப்பு அறைக்குள் எடுத்து செல்ல கூடாது மேலும் அங்கு எந்த வித சேதத்தையும் ஏற்படுத்த கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளர்கள்.இந்த திட்டத்தின் நன்மைகளில் குறிப்பிடத்தகவை மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளது.கஷ்டமான பாடங்கள் கூட எளிதில் புரியும் விதமாக கணினி திரையில் பல்வேறு எடுத்துகாட்டுக்களுடன் காண்பிக்கப்படுகிறது.மேலும் பல கணினி நிரல் மொழிகளும் கற்றுத்தரப்படுகிறது.

Previous articleரூட்டை மாற்றும் ஸ்டாலின்.. இதற்கெல்லாம் காரணம் “அமுதா” ஐஏஎஸ் தான்!! மாறப்போகும் பதவி!!
Next articleஇனி அட்டை பெட்டிகளுக்கெல்லாம் ஜிஎஸ்டி விதிப்பு!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!