கண்ட கனவு நிறைவேறியது!! கிராம மக்கள் நெகிழ்ச்சி!! நடிகர் பாலா தந்த சர்ப்ரைஸ்!!

Photo of author

By Sakthi

Actor Bala:நடிகர் பாலா கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள  (ஆணைவாரி) கெடார் கிராமத்திற்கு  ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து இருக்கிறார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின்  6 வது சீசனில் அறிமுகமானவர் பாலா. மேலும்  விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து உள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் கால் பதித்து உள்ளார்.

இவர் புலிக்குத்தி பாண்டி, நாய் சேகர் ரிடர்ன்ஸ், காக்டைல், தும்பா, ஜூங்கா போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தன்னால் முடிந்த பண உதவிகளை செய்து வருகிறார். இவர்  மருத்துவ வசதி இல்லாத கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ்  வாங்கி கொடுத்து வருகிறார்.  இது குறித்து பாலா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் 2020 இல் கொரோனா காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பல பேர் அவதிப்பட்டனர். மேலும், 2021 இல் தனிப்பட்ட முறையில் பல மக்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை.

அதை பார்த்து பல நேரங்களில் கஷ்டப்பட்டிருக்கிறேன். மக்களுக்கு அவசர காலத்தில் கிடைக்கப்பெறாத ஆம்புலன்ஸை வாங்கித் தர வேண்டும் என நினைத்து இருக்கிறேன். அதை தற்போது நிறைவேற்றி வருகிறேன்  என்று கூறினார்.  அந்த வகையில்  கல்வராயன் மலையில் இன்றளவும் சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் உள்ளன. அங்கு உள்ள குழந்தைகள் படிப்பிற்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டும். என்ற நிலைதான் உள்ளது.

மருத்துவத்திற்காக  சேலம் ,கள்ளக்குறிச்சி , ஆத்தூர் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைதான்  இன்றளவு உள்ளது.  இதனை அறிந்த நடிகர் பாலா கெடார்  மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கி  புதிய ஆம்புலன்ஸ்  வாங்கி கொடுத்து நிறைவேற்றி இருக்கிறார். இது பாலா வழங்கிய 6 வது ஆம்புலன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் மத்தியில் பாலாவின்  இச் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு  வருகிறது.