இளையராஜா வாழ்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ்… பிரபல இயக்குநர் சமீபத்தில் பேட்டி…

0
39
இளையராஜா வாழ்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ்… பிரபல இயக்குநர் சமீபத்தில் பேட்டி…
இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க விருப்பமாக உள்ளதாக பிரபல இயக்குநர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.
ஆயிரம் படங்களுக்கும் மேலாக இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்கள் தொடமுடியாத பல சாதனைகளை படைத்துள்ளார். இவரது பழைய பாடல்கள் தற்போதை தலைமுறையினர் மத்தியிலும் வரவேற்பு பெற்று வருகின்றது. இவருக்கு என்று தனியாக ரசிகர்கள் கூட்டம் கடல் போல உள்ளது.
இதையடுத்து இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்கையை படமாக எடுக்க வேண்டும் என்றும் அது என்னுடைய கனவு என்றும் பிரபல இயக்குநர் பால்கி அவர்கள் தெரிவித்துள்ளார். நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் தனுஷ் அவர்களை வைத்து சமிதாப் என்ற திரைப்படத்தை இயக்கியவர் பால்கி அவர்கள் தற்பொழுது அபிஷேக் பச்சன் நடித்து வரும் கூமர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் பால்கி அவர்கள் “இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க வேண்டும் என்பது என்னுடயை கனவு. மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவர்களை நடிக்க வைக்கப் போகிறேன். நடிகர் தனுஷ் அவர்களின் முகம் இளையராஜா அவர்களின் முகம் போலவே உள்ளது. நடிகர் தனுஷ் அவர்களும் இளையராஜா அவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் தான். இந்த படம் தான் இருவருக்குமே கனவு” என்று பால்கி அவர்கள் கூறியுள்ளார்.