லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!

Photo of author

By Sakthi

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!

Sakthi

Updated on:

லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ்! எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ள ரசிகர்கள்!!

 

நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கப்போவதாக பரவிய தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

நடிகர் விஜய் தற்பெழுது நடித்து வரும் லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

 

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் முதல் பாடலான நா ரெடி பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் லியோ திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றது. லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூரியா நடித்த ரோலக்ஸ் கதாப்பாத்திரம் மாதிரியான ரோலில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

சமீபத்தில் லியோ திரைப்படத்தில் இயக்குநர் அனுராக் கஷ்யப் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இவர் ஏற்கனவே நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

லியோ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கும் நடிகர் விஜய் அவர்கள் அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் சினிமாவில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்கப்போவதாகவும் முழுநேர அரசியலில் இரங்குவதற்கான பணிகளை நடிகர் விஜய் மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.