பிரபல இசையமைப்பாளரிடம் வேண்டுகோள் வைத்த நடிகர் தனுஷ்!!! அதற்கு அந்த இசையமைப்பாளரின் பதில் என்ன தெரியுமா!!?

0
79

பிரபல இசையமைப்பாளரிடம் வேண்டுகோள் வைத்த நடிகர் தனுஷ்!!! அதற்கு அந்த இசையமைப்பாளரின் பதில் என்ன தெரியுமா!!?

நடிகர் தனுஷ் அவர்கள் பிரபல இசையமைப்பாளர் ஒருவரிடம் தான் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமும் நடிப்பில் உருவாகும் 50வது படமுமான டி50 திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்வோம்.

நடிகர் தனுஷ் அவர்கள் தற்பொழுது இரண்டாவது முறையாக திரைப்படம் இயக்கி அதில் அவரும் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் நடிகர் தனுஷ் அவர்களுக்கு இரண்டாவது திரைப்படம் ஆகும். அது போல நடிகராக 50வது திரைப்படம் ஆகும்.

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் டி50 திரைப்படத்தில் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே சூரியா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த திரைப்படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வருகின்றது.

சென்னையை மையப்படுத்திய திரைப்படம் என்பதால் நடிகர் தனுஷ் அவர்கள் பிரபல இசையமைப்பாளர் ஒருவரிடம் வில்லனாக நடிக்குமாறு கேட்டுள்ளார். அந்த பிரபல இசையமைப்பாளர் வேறு யாரும் இல்லை. இசையமைப்பாளர் தேவா அவர்கள் தான்.

இசையமைப்பாளர் தேவா அவர்களிடம் நடிகர் தனுஷ் அவர்கள் “இது சென்னையை மையப்படுத்திய திரைப்படம் ஆகும். அதனால் டி50 திரைப்படத்தில் நீங்கள் தான் மெயின் வில்லனாக நடிக்க வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் அவர்களின் வேண்டுகோளை நிராகரித்த இசையமைப்பாளர் தேவா அவர்கள் இது குறித்து “எனக்கு வசனங்களை மனப்பாடம் செய்வது என்பது கடினமான விஷயம். இதனால் பல டேக்குகள் எடுக்க வேண்டி இருக்கும். இது மற்ற நடிகர்களை பாதிக்கச் செய்யும். அதனால் டி50 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.