மாமன்னன் திரைப்படத்தை Review செய்த நடிகர் தனுஷ்!! இடைவேளையில் திரையரங்கு அதிரும் என பதிவு!!

0
81
Actor Dhanush reviewed Mamannan movie!! Recording that the theater will shake during the break!!
Actor Dhanush reviewed Mamannan movie!! Recording that the theater will shake during the break!!

மாமன்னன் திரைப்படத்தை Review செய்த நடிகர் தனுஷ்!! இடைவேளையில் திரையரங்கு அதிரும் என பதிவு!!

 நடிகர் உதய்நிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள மாமன்னன் திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ் அவர்கள் அந்த படத்தை பற்றியும் இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களை பற்றியும், படக்குழுவை பற்றியும் புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் உதய்நிதி அவர்கள் அமைச்சர் ஆன பிறகு நடக்க மாட்டேன் என்று கூறிய பின்னர் கடைசி படமாக மாமன்னன் படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு, நடிகர் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக நடிகர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் மாமன்னன் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

மாமன்னன் திரைப்படம்  ஜூன் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாமன்னன் திரைபப்டத்தை பார்த்த நடிகர் தனுஷ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

மாமன்னன் திரைப்படத்தை பற்றி நடிகர் தனுஷ் அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் “மாரி செல்வராஜ் அவர்களின் மாமன்னன் திரைப்படம் உணர்ச்சிகரமான திரைப்படம். இந்த படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அவர்களை அணைத்துக் கொள்ள விரும்புகிறேன். உதய்நிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு இருவரும் எதார்த்தமான நடித்துள்ளனர்.

மேலும் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் சிறப்பான முறையில் தங்களின் உழைப்பை கொடுத்து நடித்துள்ளனர். ரஹ்மான் சார் அவர்களும் அழகான இசையை வழங்கியுள்ளார். இடைவேளையின்.பொழுது திரையரங்குகள் அதிரப் போகிறது” என்று புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.