திருப்பதியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ்! மொட்டையடித்து புதிய கெட்டப்பில் மாஸான லுக்கில் நடிகர் தனுஷ்!!

0
68

திருப்பதியில் தரிசனம் செய்த நடிகர் தனுஷ்! மொட்டையடித்து புதிய கெட்டப்பில் மாஸான லுக்கில் நடிகர் தனுஷ்!!

 

பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் திருப்பதி எழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் நடிகர் தனுஷ் மொட்டையடித்து புதிய கெட்டப்பில் இருக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

 

நடிகர் தனுஷ் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் திரைபப்டம் ஆகும். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

 

கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் தனுஷ் அவர்கள் இயக்குநர் சேகர்  கம்மூலா இயக்கும் திரைப்படத்திலும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்திலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

 

நடிகர் தனுஷ் மீண்டும் திரைப்படம் இயக்கவுள்ளார். இந்த திரலப்படத்தை நடிகர் தனுஷ் அவர்கள் இயக்கி நடிக்கவும் உள்ளார். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. எஸ்.ஜே சூரியா, விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன்,  துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயர்ம், அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் நடிகர் தனுஷ் அவர்களின் 50வது படமாகவும், நடிகர் தனுஷ் இயக்கும் இரண்டாவது படமாகவும்  உருவாகவுள்ளது.

 

இந்நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் திருப்பதி சென்ற நடிகர் தனுஷ் அவர்கள் மொட்டை அடித்துள்ளார். திருப்பதியில் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் தனுஷ் அவர்கள் மொட்டையடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.