100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

Photo of author

By Sakthi

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

Sakthi

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!
நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் ஆகும்.
நடிகர் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது திரைப்படமாகவும் இவர் நடிக்கவுள்ள 50வது படமாகவும் டி50 திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்ஜே சூரியா, நடிகர் சந்தீப் கிஷன் இருவர்களும் தனுஷ் அவர்களின் சகோதரர்கள் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை துஷாரா விஜயன் இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டி50 திரைப்படம் வடசென்னை கதை களத்தை மையமாக வைத்து உருவாகவுள்ளது. டி50 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.
நடிகர் தனுஷ் தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை முடித்த பிறகு நடிகர் தனுஷ் இந்த டி50 திரைப்படத்தின் பணிகளை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.