நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு! ரசிகர்கள் இடையே உண்டான பரபரப்பு!

Photo of author

By Sakthi

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் தமிழ் திரைப்படங்களை தவிர்த்து இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார், தற்சமயம் தமிழில் அதிக அளவிலான படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தன்னுடைய மனைவியுமான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு அவர் திடீரென்று அறிவித்திருக்கிறார்.

இவர்கள் இருவரும் கடந்த 2004ஆம் வருடம் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்கள், இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரு மகன்கள் இருக்கிறார்கள்.

 

மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக நேற்று இரவு தனுஷ் திடீரென்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சென்ற 18 வருட காலமாக தம்பதியராகவும், பெற்றவர்களாகவும், ஒன்றாக பயணம் செய்தோம். தற்சமயம் நானும் ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்திருக்கிறோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

நடிகர் தனுஷ் திடீர் என்று விவாக ரத்து செய்வதாக அறிவித்திருப்பது ரசிகர்கள் இடையிலும், தமிழ்த் திரையுலகிலும், அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தொடர்பாக எதுவும் அவர் தெரிவிக்கவில்லை ,அதேபோல இதே போன்ற ஒரு அறிக்கையை ஐஸ்வர்யாவும் வெளியிட்டிருக்கிறார்.