கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்..

Photo of author

By அசோக்

கவுண்டமணியின் மனைவி திடீர் மரணம்!.. ரசிகர்கள் இரங்கல்..

அசோக்

goundamani

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி 90களில் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக மாறியவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் சுப்பிரமணி. பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் நடிக்கும்போது எதிரே நடிப்பவர் பேசும் வசனத்திற்கு சரியான கவுண்ட்டரை கவுண்டமணி கொடுப்பார் என்பதால் இவரை கவுண்ட்டர் மணி என அழைத்தார்கள்.

சினிமாவில் இவரின் பெயரை போடும்போது கவுண்டமணி என தெரியாமல் போட்டுவிட அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது. 90களில் சத்தியராஜ், பிரபு, கார்த்திக், ராமராஜன் போன்ற நடிகர்களின் எல்லா படங்களிலும் கவுண்டமணி இருப்பார். கிட்டத்தட்ட இரண்டாவது கதாநாயகன் போல ஹீரோவுடன் இணைந்து நடித்து படம் முழுக்க வருவார்.

வடிவேலும், விவேக், சந்தானம் அதிக படங்களில் நடிக்க துவங்கியதால் கவுண்டமணியின் மார்க்கெட் கீழே போனது. அதோடு, உடல்நிலை பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக கவுண்டமணியும் சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இடையில் நடித்த சில படங்களும் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில்தான் அவரின் மனைவி சந்தியா உடல் நலம் பாதிக்கப்பட்டு காலமாகியிருக்கிறார். அவரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள் கவுண்டமணியின் வீட்டில் இறுதி சடங்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.