வில்லனாக களம் இறங்க இருக்கும் நடிகர் ஜெய்!

Photo of author

By Sakthi

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஜெய் முக்கியமானவர் பகவதி திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகு சென்னை-28 படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. அதன்பிறகு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். கோவா, எங்கேயும் காதல் ,ராஜா ராணி, சுப்பிரமணியபுரம், போன்ற திரைப்படங்கள் அவருடைய நடிப்பின் சிறப்பம்சங்கள்.

தற்சமயம் அவர் எண்ணித்துணிக, குற்றமே குற்றம், சிவசிவா, போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அட்லீ தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஒரு புதிய திரைப்படத்தின் ஜெய் வில்லனாக நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இந்த திரைப்படத்தில் ஜெய் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற உடன் அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

இதற்கு நடுவில் சுந்தர்சியின் இணை இயக்குனர் பத்ரி இயக்கிவரும் திரைப்படத்திலும் ஜெய் சிறப்பு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.