நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் KH233 திரைப்படம்! ரைஸ் டு ரூல் என்று போஸ்டரை வெளியிட்டு அறிவித்த படக்குழு!!

0
114

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் KH233 திரைப்படம்! ரைஸ் டு ரூல் என்று போஸ்டரை வெளியிட்டு அறிவித்த படக்குழு!!

 

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் கேஹெச் 233(KH233) திரைப்படம் பற்றி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

நடிகர் கமல்ஹ்சன் அவர்கள் தற்பொழுது இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதூயடுத்து நடிகர் கயனமல்ஹாசன் அவர்கள் அவருடைய கேஹெச்234 திரைப்படத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இயக்குநர் சங்கரின் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு இயக்குநர்   மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிக்கும் 233வது திரைப்படமான கேஹெச்233 திரைப்படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வந்தது. இந்த தகவலை படக்குழு தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று(ஜூலை4) மாலை 6 மணிக்கு கேஹெச் 233 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளார். வெளியான அறிவிப்பு போஸ்டர் முழுக்க முழுக்க சிவப்பு நிற வண்ணத்தில் உளளது. அந்த போஸ்டரில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தீப்பந்தத்தை ஏந்திய படி நிற்பது போல் உள்ளார். மேலும் சிலரது கைகளும் அந்த போஸ்டரில் உள்ளது. அது மட்டுமில்லாமல் Rise To Rule என்ற வாசகமும் உள்ளது.

 

இந்த அறிவிப்பு போஸ்டரை பார்க்கும் பொழுது விவசாயத்தை கலந்த அரசியல் படமாக ஹெச் வினோத் எடுக்கவுள்ளதாக தெரிகின்றது. நடிகர் கமல்ஹாசன் அவர்கள் இந்தியன்2 மற்றும் புரோஜெக்ட் கே திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்த பின்னர் கேஹெச்233 திரைப்படத்தில் நடக்கத் தொடங்குவார் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.