தானாக வந்த வாய்ப்பை நழுவ விட்ட கரன்..! கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட விக்ரம்..!

Photo of author

By Priya

Actor Karan: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும், சில நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள்.சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், ஒரு காலத்தில் வில்லனாக நடித்தவர் தான் கரண். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவரின் (Actor Karan) நடிப்பு ரசிகர்களை ஈர்க்க வைத்துள்ளது.

அதன் பிறகு இவர் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சில படங்களில் ஹீரோவுக்கு நண்பன் கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருந்து வந்தார். தற்போது நடிகர் கரண் தவறவிட்ட ஒரு படத்தின் தகவல் வெளிவந்துள்ளது.

அந்த படம்  தற்போது இருக்கும் பிரபல நடிகர் ஒருவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்றதும். பிறகு அந்த படம் அந்த நடிகரின் சினிமா கேரியரை உயர்த்தி உள்ளதையும் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சேது (sethu movie) திரைப்படம் தான்.

சேது திரைப்படத்தில் முன்னதாக நடிகர் கரண் நடிக்க வேண்டி இருந்ததாகவும், பின்னாளில் அவர் அந்த படத்தில் நடிப்பதற்கு கூடுதல் சம்பளம் கேட்டதால், தயாரிப்பு நிறுவனத்தால் கொடுக்க முடியவில்லை. இதன் பிறகுதான் நடிகர் விக்ரம் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

சேது திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 100 நாட்களையும் தாண்டி இந்த படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. நடிகர் விக்ரமிற்கு சினிமா கேரியரில் இந்த திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது எனலாம். மேலும் சேது திரைப்படதில் கரண் நடித்திருந்தால் அவரின் சினிமா கேரியர் நன்றாக அமைந்திருக்கும் என்றும், இது போன்ற நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க நடிகர் கரண் தவிறவிட்டார் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.