உருவாகிறது கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம்!

Photo of author

By Sakthi

கார்த்தி நடிப்பில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் அவர் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிகர் கார்த்தி கைதியாக நடித்து தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.நடிகர் நரேன் இதில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கிறார்.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு திரைப்படத்தில் பாடல்கள் இல்லை, கதாநாயகி இல்லை, முழுக்க முழுக்க ஆக்ஷன் மட்டுமே இருந்தது. இவ்வாறு ஒரு திரைப்படம் வந்தால் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வழக்கத்தையெல்லாம் தகர்த்தெரிந்து இந்த படம் நல்ல வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க இரவு சமயத்தில் தந்தை மகள் பாசத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நடிகர் கார்த்திக் இன்று பிறந்தநாள் என்று சொல்லப்படுகிறது. இதனை முன்னிட்டு ரசிகர் ஒருவர் கைதி தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் சமூகவலைதளத்தில் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்று தெரிவித்திருக்கிறார். அந்த சமயத்தில் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் அதற்கு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.