பெருமாள் பிச்சையா இது? அடையாளமே தெரியாமல் மாறி போன வில்லன் நடிகர்..!

Photo of author

By Priya

Actor Kota Srinivasa Rao: தெலுங்கு சினிமாவில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் தான் கோட்டா சீனிவாச ராவ். இவர் தமிழ் சினிமாவிலும் நிறைய படங்கள் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகரான இவர் சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பு எப்போதும் தனியாக தெரியும். அந்த அளவிற்கு இவரின் வில்லத்தனமான முகப்பாவனைகள், பேச்சு என அனைத்தும் மக்களை கவர்ந்தது என்று தான் கூறவேண்டும். அதிலும் இவரின் தனித்துவமான சிரிப்புக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். அதனால் தான் இவர் தெலுங்கு சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்தார்.

தமிழ் சினிமாவில் இவர் தமிழ் சினிமாவில் அதிக அளவிளான படங்களில் நடித்துள்ளார். குத்து, தாண்டவம், சகுனி, சாமி, திருப்பாச்சி, கோ மற்றும் இன்னும் பல தமிழ் திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். அதிலும் இவர் சாமி, திருப்பாச்சியில் நடித்த வில்லன் கதாப்பாத்திரத்தை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது.

சாமி படத்தில் பெருமாள் பிச்சையாகவும், திருப்பாச்சியில் சனியன் சகடையாகவும் நடிப்பில் மிரட்டடிருப்பார். வில்லன் என்றால் இவரை போல தான் இருக்க வேண்டும் என்று அளவிற்கு இவரின் நடிப்பு, திரையில் இவரின் தோற்றம் இருக்கும்.

தற்போது இவரின் புகைப்படம் வெளியாகி அனைவரின் கவனம் பெற்று வருகிறது. தற்போது 80 வயதிற்கு மேல் ஆகும் இவரின் புகைப்படம் (Actor Kota Srinivasa Rao Recent photo) சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட அவரின் ரசிகர்கள் சாமி படத்தில் நடித்த பெருமாள் பிச்சையா என்றும், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.

மேலும் படிக்க: விவாகரத்து பெற போகும் பிரபல ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி?