MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன்

0
152
DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News
DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன்

நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளதை விமர்சிக்கும் வகையில் திமுகவின் தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது அவருடைய பதிவில் பாஜகவில் நடிகர் பார்த்திபன் இணைவது போன்ற கற்பனையில் “அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்….” என பதிவிட்டிருந்தார்.

திமுக எம்பி டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் என்பது பெரும்பலோனோருக்கு தெரிந்ததே. ஆனால் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும் மறந்து தொடர்ந்து தரக்குறைவான அரசியல் விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார் என அவருக்கு எதிராக பல்வேறு கட்சியினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் பார்த்திபனின் திறமைக்கு கிடைத்த விருதை அரசிலாக்கி விமர்சித்ததை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.இந்நிலையில் இது குறித்து திமுக எம்பியை கண்டித்து நடிகர் பார்த்திபன் தன்னுடைய விளக்கத்தை அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.

‘இரவின் நிழல்’என்ற சவால்மிகு திரைப்படம் உருவாக்குவதைத் தவிர,வேறெந்த கட்சிக்குள்ளும் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை!நாளையே மழை வரலாம்,வரும்வேளை குடை மலரலாம். அதற்காக வானிலை அறிக்கை கேட்கும் போதே ஜலதோஷம் பிடித்து விட்டதாக மூக்கை சீந்த வேண்டிய அவசியமில்லை!(மலரும் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் தாமரையைக் கருப்பாக கற்பனை செய்ய வேண்டாம்.அது ஒரு கொக்கி வார்த்தை-மேலும் படிக்க)
பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு Dr S செந்தில்குமார் அவர்கள் “அண்ணனுக்கு
பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்”என்று sweet-ஆக tweet-ட்டி wit-டிருக்கிறார்.செகு அண்ணனுக்கு நான் நன்றியை பார்சல் செய்வதற்குள் அவரது comment box-ல் நிரம்பி வழிகிறது வசவுகள்!தொகுதி மேம்பாட்டுக்கு பயன்படும் நேரத்தில் கீழ்தரமான comment போட்டதால்,நெட்டிசன்கள் மீம்போட்டு மேம்பாட்டு பணியில் அசிங்கப்படுத்துகிறார்கள் அவரை.அதலொன்று ‘MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது.sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் ்அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்
!———-___________________________________________ திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.இவன் ‘ படத்தில் “seat குடுத்தா நிப்பீங்களா?”என என்னிடம் கேட்க,“ Seat குடுத்தா ஏன் நிக்கனும்? உக்காரலாமே?’என இன்றுவரை joke-க்கி விட்டு மட்டும் நகர்கிறேன். சினிமாவில் இன்னுங்கொஞ்சம் stand செய்ய வேண்டும் என்பதால் வேறு எங்கும் நிற்பதில்லை எதிலும் சேர்வதில்லை.மற்றபடி மக்கள் பணிகளில் ஆர்வமுண்டு ஆனால் அதற்கு பெயர்தான் அரசியலா?என அறியாதவன் அடியேன்! உண்மையான நேர்மையான சுய சிந்தனையிலும் சுய வருமானத்திலும் கடுமையான உழைப்பிலும் உருவான ஒத்த செருப்புக்கு தகுதியின் அடிப்படையில் மட்டுமே கிடைக்கும் விருதினைக் கொச்சைப் படுத்தினால் மனம் வலிக்கும்! உரியது கிடைக்காத போது ஆனந்த’மாய் தூக்கி எறிந்து விட்டு மேடை இறங்குவேனேத் தவிர,அதைத் “தா”இதைத் “தா” வென மரை’முகமாக என் முகம் மலரமாட்டேன்!அரசியலில் மோதிப் பார்க்கலாம் என முடிவெடுத்து விட்டால் அதை பேராண்மையுடன் செய்வேன்.
உசுப்’பேத்தாதீங்க பாஸ்!!!

கடைசியாக வந்த செய்தி :சூரியன் உதிக்குமுன் கண் விழித்த எனக்கு,திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமும், உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையுமான என் நண்பர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அச்செய்திக்கு வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன்.அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்.

யாகாவாராயினும் நா காக்க…..தற்சமயம் உயிர் காக்க – காக்க முக கவசம் அணிக! என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleகுறை கூறியே அரசியல் செய்பவர்களுக்கு எங்களை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை…! கடும் கோபத்தில் முதல்வர்….
Next articleபயங்கர அப்செட்டில் திருமாவளவன்…! நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறுமா…!