காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தின் மூலமாக திரைத்துறையில் பிரபலமானவர் நடிகர் ராஜேந்திரநாத் 90 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நடிகர் ராஜேந்திரநாத் திரைப்பட உரிமையாளர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் விநியோகஸ்தர் என்று தெரிவிக்கப்படுகிறது. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட கல்லூரியின் இயக்குனர் பிரிவில் பயிற்சி பெற்ற மாணவர் மற்றும் ஒளிப்பதிவாளர் போன்ற பல பன்முகத்தன்மை கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
பல திரைப்படங்களில் படித்து அதன் மூலமாக இவரை கிடைக்காத புகழ் தென்றல் என்ற ஒரு நெடுந்தொடரில் நடித்ததன் மூலமாக கிடைத்தது என்று தெரிவிக்கிறார்கள்.
அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிகவின் இளைஞரணி துணைச் செயலாளரும் நடிகருமான ராஜேந்திரநாத் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தேமுதிக கூட்டணி சார்பாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தேமுதிக இளைஞரணி துணைச் செயலாளரும் திரைப்பட நடிகருமான ராஜேந்திரநாத் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்டோர் தங்களுடைய 25வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு சாலிகிராமத்தில் இருக்கின்ற விஜயகாந்த் அவர்களின் வீட்டில் அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்கள் அவர்களை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்தி இருக்கிறார்கள்.