மருத்துவமனையில் ரஜினிகாந்த்! தலைவருக்கு என்ன ஆச்சு பதறிப்போன ரசிகர்கள்!

Photo of author

By Sakthi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நவம்பர் மாதம் நான்காம் தேதி தீபாவளியன்று வெளியாக இருக்கக்கூடிய அண்ணாத்த திரைப்படத்தின் சுவரொட்டிகள் மற்றும் பாடல்கள் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அனைத்தும் வெளியாகி இருக்கிறது படத்துக்காக ரஜினியின் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை கூடுதல் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதத்தில் சென்ற 25 ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது, இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், நண்பர்கள், தலைவர்கள் என்று எல்லோரிடமும் வாழ்த்துக்களை பெற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். நேற்று காலை தன்னுடைய குடும்பத்தினருடன் அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று மாலை ரஜினிகாந்த ஆழ்வார்பேட்டையில் இருக்கக்கூடிய காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது இதுதொடர்பாக விளக்கம் கொடுக்கின்ற ரஜினிகாந்த் அவர்களின் மனைவி லதா, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு வருடமும் அவர் முழு உடல் பரிசோதனையை செய்துகொள்வது வழக்கம் இதனால் அவர் நலமுடன் இருக்கிறார் பரிசோதனை முடிவடைந்து விரைவில் வீடு திரும்ப இருக்கிறார் என்று கூறினார்.

ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரையில் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. தொடர்ந்து ரஜினிகாந்த் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் வெளிவந்த சூழ்நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி அறிந்த ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியது, வழக்கமான உடல் பரிசோதனை நான் என்று கூறிய பின்னர் தான் அவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.