ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்… 

0
117

 

ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்…

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை தேசியக் கொடியேந்தி கொண்டாடினார்.

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் படமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

 

ஜெயிலர் திரைப்படம் தற்பொழுது 300 கோடி ரூபாய் வசூலைக் கடந்து 400 கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஜெயிலர் திரைப்படத்திற்கு ரசிகன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இமயமலை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி கடந்த சில தினங்களாக இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

 

இமயமலையின் முதல்நாள் பயணமாக நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ளவர்களை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அங்கு நிறுவப்பட்டுள்ள தயானந்த சரஸ்வதி சுவாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினார்.

 

பின்னர் அங்கிருந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபட்ட நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று(ஆகஸ்ட்14) தூவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்திற்கு சென்றார்.

 

நாட்டின் 76வது சுதந்திர தினம் நாளை(ஆகஸ்ட்15) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இமயமலைக்கு புறப்பட்டு சென்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துவாரஹாத்தில் உள்ள சத்சங்க ஆசிரமத்தில் உள்ள சுவாமிகளுடன் தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர தின விழாவை கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Previous articleதமிழ் சினிமாவில் பிசியான தெலுங்கு நடிகர்… யார் இவர்தான் அந்த நடிகரா…
Next articleஇந்த ஒரு இலையை பயன்படுத்தி பாருங்கள் 8 வித பிரச்சனைகள் தீரும்!!