ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்!என்ன நடந்தது!

Photo of author

By Sakthi

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்!என்ன நடந்தது!

Sakthi

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஐதராபாத்தில் இருக்கின்ற அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்.

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வார காலமாக ஐதராபாத்தில் இருக்கின்றன ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பரபரப்பில் இருந்த நான்கு நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினிகாந்த் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என்று தெரிய வந்திருக்கின்றது. ஆனாலும் ரஜினிகாந்த் அண்ணன் தனிமைப் படுத்திக் கொண்டு இருக்கின்றார். அவர் சென்னை வந்து தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இன்று காலை அவர் திடீரென்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில் ரஜினிகாந்த் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்ற 10 தினங்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்து வந்தார். அங்கே இருந்த ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்களுக்கு 22ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. அதன்பின்பு ரஜினி தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கின்ற நிலையில்,அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

அதோடு ரஜினிகாந்த் அவர்களுக்கு தொற்றின் அறிகுறிகள் எதுவும் கிடையாது. ரத்த அழுத்தத்தில் கடுமையான ஏற்ற இறக்கம் இருப்பதன் காரணமாக, ரஜினிகாந்த மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. சீரற்ற ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர அவருக்கு வேறு எந்த ஒரு பிரச்சினையும் கிடையாது. எனவும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது. ரஜினிகாந்த் நலம் பெற்று வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.