திடீரென அமெரிக்கா புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்! காரணம் என்ன தெரியுமா!

Photo of author

By Sakthi

சென்ற சில மாதங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா கிளம்பினார். சிகிச்சை முடிந்து அங்கேயே சில தினங்கள் ஓய்வெடுத்த பிறகு தமிழகம் திரும்பி இருந்தார். அதன் பிறகு அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு முடிவு செய்த சமயத்தில் நோய்த்தொற்று பரவல் உண்டானது.இதன் காரணமாக, நடிகர் ரஜினிகாந்தின் அமெரிக்க பயணம் சென்ற வருடம் தடைபட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலையும் ஏற்பட்டதால், அவருடைய பயணம் மீண்டும் தடைபட்டுப் போனது. இதனை அடுத்து அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் முடித்துக் கொடுத்தார். இதனைத்தொடர்ந்து அடுத்ததாக நோய்த்தொற்று பரவலின் மூன்றாவது அலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே தற்சமயம் நோய்த்தொற்று பரவல் குறைவாக இருக்கும் சமயத்திலேயே அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என்று வடிவு செய்த நடிகர் ரஜினிகாந்த் நோய் தொற்று காலம் என்ற காரணத்தால், சிறப்பு விமானத்தின் மூலமாக அவர் அமெரிக்கா சென்று இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் ரஜினிகாந்திற்கு இரண்டாவது முறையாக மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலமாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது என்று தெரிவிக்கப்படுகிறது.

அதன்பிறகு கடந்த 2019ஆம் ஆண்டு அவருக்கு உடல்நிலை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அந்த சமயத்தில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ரஜினிகாந்த் இருந்ததால் அமெரிக்கா செல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல சென்ற வருடமும் நோய்த்தாக்கம் அதிகமாக இருந்ததால் அவருடைய மருத்துவ பயணம் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில், தற்சமயம் நோய்த்தொற்று தடுப்பூசி செலுத்த்திக்கொண்ட ரஜினிகாந்த் அரசின் சிறப்பு அனுமதி வாங்கி அமெரிக்கா கிளம்பியிருக்கிறார். சென்னையிலிருந்து ரஜினிகாந்த் மட்டும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் இவருக்கு முன்னரே ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அங்கேயே ரஜினிகாந்துடன் இணைய இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவ பரிசோதனை போன்றவற்றை முடித்துக்கொண்டு மூன்று வார காலம் அமெரிக்காவில் ஓய்வு எடுத்த பின்னர் ரஜினிகாந்த் சென்னைக்குத் திரும்ப இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.