நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம்1 முக்கியமான தகவல் வெளியானது!!

Photo of author

By Sakthi

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படம்1 முக்கியமான தகவல் வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஏராளமான முன்னணி நடிகை நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் ஜெயலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் ஜூலை மாதம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாட்டு ஜூன் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தாததால் ஜெயிலர் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.