நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!

Date:

Share post:

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சிறிய தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் கதை திருட்டில் சிக்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தற்பொழுது லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஷ்ணு விஷால், நடிகர் விக்ராந்த் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.

லைகா புரொடக்சன்ஸ் தாயாரிக்கும் லால் சலாம் திரைப்படத்நிற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்த நிலையில் லால் சலாம் திரைப்படம் கதை திருட்டில் ஈடுபட்டதாக தகவல்கள் பரவி வருகின்றது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், மற்றும் படத்தை பற்றி கேள்விப்பட்ட தகவல்களை வைத்து உதவி இயக்குநர் ஒருவர் லால் சலாம்  என்னுடைய கதை என்று சர்ச்சையை கிளப்பினார்.

இதை அறிந்த இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் குற்றம் சாட்டிய அந்த உதவி இயக்குநரை அழைத்து அவருடைய கதையை வாங்கி படித்தார். இதையடுத்து உதவி இயக்குநருடைய கதைக்கும் லால்சலாம் படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து லால் சலாம் திரைப்படத்தின் கதை திருட்டு கதை என்று பரவிய வதந்திக்கு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

 

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...