கனகா என்று நான் தான் பெயரை மாற்ற சொன்னேன்..! நடிகர் ராமராஜன்!!

Photo of author

By Priya

Actress Kanaka: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை என்றென்றும் நம்மால் மறக்க முடியாது. அதிலும் அந்த படங்களில் வரும் கதபாத்திரங்கள், பாடல்கள், நகைச்சுவை என்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிடும் சில படங்கள். ஒரு காலத்தில் 80ஸ், 90-ஸ்களின் ஃபேவரைட் திரைப்படத்தில் நிச்சயம் இந்த கரகாட்டக்காரன் திரைப்படம் இருக்கும். இப்பொழுதும் இந்த படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்ப்போம்.

இந்த படத்தில் கவுண்டமணி , செந்தில், கோவை சரளா அகியோர்களின் நகைச்சுவையை இன்றளவும் யாராலும் மறக்க முடியாது. இந்த படம் பட்டி, தொட்டி எங்கும் பிரபலமானதுக்கு முக்கிய காரணம் இந்த படத்தில் வரும் நகைச்சுவைகளும் தான். அதிலும் வாழைப்பழத்தை வைத்து செந்தில், கவுண்டமணி கூறும் நகைச்சுவையும், ஒரு காட்சியில் கோவை சரளா கூறும் என் கிரகம்.. என்ற நகைச்சுவை காட்சியும் மக்களால் இன்றளவும் ரசிக்கப்பட்டு வரும் காட்சிகளாக உள்ளது.

மேலும் இந்த கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இசையமைத்து இசைஞானி இளையராஜா. இந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட் தான். மேலும் இந்த படத்தில் முத்தையா கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ராமராஜன். காமாட்சி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை கனகா. இவர்களின் ஜோடி கரகாட்டக்காரன் படம் வெளிவந்த நேரத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஜோடியாகும்.

கனகா, ராமராஜன் இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். அதிலும் கனகா தன்னுடைய தனித்துவமான நடிப்பு, கண்களால் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் என்று தான் கூறவேண்டும். கனகா அதன் பிறகு தமிழ், மலையாளம் என படங்கள் நடித்திருந்தாலும், இவருக்கு தமிழ் சினிமாவில் பொருத்தமான ஜோடியாக ராமராஜன் (Actor Ramarajan) தான் என்று அப்பொழுது அனைவராலும் கூறப்பட்டு வந்தது.

இவர் ராமராஜனுடன், தங்கமான ராசா படத்திலும் ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் ராமராஜன் பேட்டி ஒன்றில் நடிகை கனகாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கராகாட்டகாரன் திரைப்படத்தில் நடிகை கனகா தன் படத்தில் நடிப்பது உறுதியான பிறகு, இயக்குநர் கங்கை அமரன் கனகா மஹாலெட்சுமி தான் நடிக்க போகிறார் என்று கூறினார். நான் தான் கூறினேன் கனகா மஹாலெட்சுமி என்ற பெயருக்கு பதிலாக கனாக என மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்தேன்.

மேலும் நடிகை கனகாவிற்கு அவரின் தாயார் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும், அவர் மறைந்த பிறகு அதனை கனகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க: இளையராஜாவை பார்த்து சிரித்த அம்மன்! முதல் படத்திலேயே நடந்த அபசகுணம்!