நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி!

Photo of author

By Hasini

நடிகர் மீண்டும் செய்த திருமணம்! புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி!

நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு குணசித்திர நடிகர். இவரது நடிப்பு எல்ல படங்களிலும் தனியாக பேசும் விதமாக இருக்கும். இவரது கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், ஐந்து மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ஆரம்ப காலத்தில் கன்னட நாடகங்களில் நடித்து இருந்தாலும், தமிழில் 1994 ம் ஆண்டு கே.பாலசந்தர் அவர்களால் டூயட் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களிலும் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தமிழில் அண்ணாத்த, எனிமி, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம், கே.ஜி.எப்: சாப்டர் 2 உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் 1994 ஆம் ஆண்டு லலிதகுமாரி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

பின்னர் பிரகாஷ்ராஜ் இந்தி நடன இயக்குனர் போனி வர்மாவை காதலித்து 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் ஒருவனும் உள்ளான். இந்நிலையில் அவர்கள் தங்களின் 11ஆம் ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினார். அப்போது தனது மகன் மற்றும் மகள்கள் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் நானும், எனது மனைவி போனி வர்மாவும் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்களுக்காக ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்போதெல்லாம் யார் திருமண நாளை எல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள், ஆனால் பாருங்கள் தனது 56 வயதில் இரண்டாவது மனைவியை மகிழ்ச்சியாக்க மீண்டும் திருமணம் செய்துள்ளார். அதுவே பெரிய விஷயம் அல்லவா? இவர் மிக நல்லவர் தான் போல.