ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன் திரைப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் அயலான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. முதலில் இந்த திரைப்படமானது தீபாவளி அன்று வெளியாக இருந்தது. சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்தனர்.

இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் சமீப காலமாக வெளியாகி வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னால் ஏலியன், சிவகார்த்திகேயன், மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இப்படத்தின் இயக்குநர் என அனைவரும் இருக்கும் ஒரு போஸ்டரை சிவகார்த்திகேயன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் இப்படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி வெளியாகும் எனவும், அதனை உறுதி செய்யும் விதாமாக தான் இந்த போஸ்டர் பகிரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்த போஸ்டரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.