பாலிவுட்டில் கர்ணனாக கால் வைக்கும் நடிகர் சூர்யா!! முதல் படமே இரண்டு பாகங்களாக உருவாகும் என்று தகவல்!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா அடுத்ததாக ஹிந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டாணி அவர்கள் கதாநாயகியாக நடிக்கின்றார்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் கங்குவா திரைப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் கங்குவா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகாயுள்ளது.
ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியானது. தற்பொழுது மீண்டும் அந்த தகவல் சற்று நம்பும்படி வெளியாகி இருக்கின்றது.
அதாவது நடிகர் சூர்யாஅவர்களும் பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் அவர்களும் மும்பையில் சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த சந்திப்பில் இருவரும் திரைப்படம் பற்றி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் மிகப் பெரிய பொருட்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகப் போகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா, இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் கூட்டணியில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 2024ம் ஆண்டு முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் மூலமாக நடிகர் சூர்யா முதன் முறையாக பாலிவுட் சினிமாவில் அதாவது ஹிந்தி சினிமாவில் நடிகராக அறிமுகமாகவுள்ளார். நடிகர் சூரியா ஹிந்தியில் நடிக்கப் போகும் இந்த திரைப்படம் மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து உருவாகப் போகின்றது.மேலும் நடிகர் சூர்யா அவர்கள் கர்ணன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.