கப்பல் படை தளபதியாக பதவி ஏற்கும் நடிகர்! கடைசி படமாக அறிவிப்பு!

0
158
Actor to take over as Navy Commander Announcement as the last film!
Actor to take over as Navy Commander Announcement as the last film!

கப்பல் படை தளபதியாக பதவி ஏற்கும் நடிகர்! கடைசி படமாக அறிவிப்பு!

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்ற படங்கள். அந்த வரிசையில் 25வது படமாக நோ டைம் டூ டை தயாராகி உள்ளது. இதில் டேனியல் க்ரேக் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆரம்பித்த இவர்.

இதுவரை காசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் என நான்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ல் வெளியான ஸ்பெக்டர் படம் தனது கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்றும் இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். ஆனால் திடீரென்று தனது முடிவை மாற்றி 5 வது படமான நோ டைம் டு டை படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் டேனியல் க்ரேக் நடிக்கும் கடைசி ஜேம்ஸ்பாண்ட் படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதன் கடைசி நாள் படப்பிடிப்பு விழாவில் டேனியல் கிரேக் படக்குழுவினரின் மத்தியில் கண்ணீர் விட்டு அழுதபடி உருக்கமாகப் பேசி அவர்களிடமிருந்து விடைபெற்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டேனியல் கிரேக்கை கௌரவிக்கும் விதமாக இங்கிலாந்து கப்பல் படைத் தளபதியாக தற்போது அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜேம்ஸ்பாண்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்திய கப்பல் படை சீருடை அணிந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் அந்த நடிகர் கப்பல் படை தளபதி என்ற கவுரவமிக்க பதவி தனக்குக் கிடைத்திருப்பது மிகவும் பெருமை அளிப்பதாக உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

https://twitter.com/007/status/1441017087737094146/photo/1?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1441017087737094146%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2F2021%2F09%2F24033510%2Fappointed-Commander-of-the-British-Navy.vpf

Previous articleசூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு! படுகாயம் அடைத்த 13 பேர்! ஒருவர் பலி!
Next articleலஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய அதிரடி சோதனை! வசமாக சிக்கிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர்!