ரத்தம் பட புரோமொஷனில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி!!

Photo of author

By Jeevitha

ரத்தம் பட புரோமொஷனில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி!!

நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த வாரம் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்தது.

இந்த சம்பவத்தை குறித்து விஜய் ஆண்டனி அவர்கள் சில தினங்களுக்கு முன்னாள் ஒரு உருக்கமானா பதிவை வெளியிட்டார். அதை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்து திரைக்கு வரவிருக்கும் “ரத்தம்” திரைப்படத்தின் புரோமொஷன் விழாவில் அவரது இரண்டாவது மகளை அழைத்து வந்தது, நெகிழ்வூட்டும் ஒரு தருணமாக அமைந்தது. அவரது இரண்டாவது மகளை பொது இடங்களுக்கு அழைத்து சென்று, அவருடன் நேரம் செலவிடுதல் போன்றவற்றிக்கு தான்,தற்போது விஜய் ஆண்டனி அதிக கவனம் செலுத்தி வருகிறாராம்.

மகள் இறந்த துக்கம் நெஞ்சோடு இருந்தாலும், கடமை தவறாமல் அவரது படப் புரோமொஷன் விழாவில் கலந்துக்கொண்டதை பலர் பாரடி வருகின்றனர். மேலும் இந்த விழாவில் அவரது இரண்டாவது மகளுடம் இருக்கும் புகைப்படமானது இணைய தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.