விஜய் அண்ணன் இல்லை..! சித்தப்பா..! கில்லி படத்தில் நடித்த ஜெனிபர்..!

0
350
Gilli Jennifer
#image_title

Gilli Jennifer: தற்போது திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் கில்லி. கில்லி கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை தரணி இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். ஆக்ஷன் படமாக வெளிவந்த இந்த படம் நடிகர் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்திருந்தது. இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தின் வசூலை இந்த படம் முறியடித்துள்ளது.

கில்லி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தவர் தான் பேபி ஜெனிபர் (Actress Nancy Jennifer) என்று புகழ்பெற்ற நான்சி ஜெனிபர். இவர் கில்லி படத்தில் புவனா கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். விஜய்க்கு தங்கையாக இவர் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இவர் குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே தனது சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். அதன் பிறகு முண்ணனி நடிகையாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார். இவர் 1991 ல் கிழக்கு கரை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் இவர் கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிப்பதற்கு முன்பே கடந்த 1997-ம் ஆண்டு நடிகர் விஜய், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான நேருக்கு நேர் படத்தில் பெற்றோர்களின் விவாகரத்தில் சிக்கிய சிறு குழந்தையாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா மாமாவாகவும், நடிகர் விஜய் சித்தப்பாவாகவும் நடித்திருப்பார்கள்.

Gilli Jennifer

இந்த படம் குறித்து பதிவொன்றை சமீபத்தில் வெளியிட்ட ஜெனிஃபர் என் வாழ்க்கையில் நான் நடித்த படங்களில் மிகவும் பிடித்த படம் என்றால் அது நேருக்கு நேர் படம் தான். இந்த படத்தில் நான் சிறந்த நடிகையாக உணர்ந்தேன் என்றும், இந்த படத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருது உட்பட 13 விருதுகளை பெற்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: தல நடிக்க வேண்டிய படம் அது? வாய்ப்பை தவறவிட்ட நடிகர் அஜித்..!

Previous articleஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?
Next articleBoys Movie: ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல இசையமைப்பாளர்..!