இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்!!

Photo of author

By Sakthi

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்!!

Sakthi

இரட்டை வேடங்களில் நடிகர் விஜய்! லியோ மீது எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்கள்!
நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் அர்ஜூன் கதாப்பாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
வாரிசு படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் லியோ படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜய் அவர்கள் பார்த்திபன் மற்றும் லியோ என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் அர்ஜூன் அவர்கள் லியோ திரைப்படத்தில் சஞ்சய் தத் அவர்களின் சகோதரராக நடிக்கின்றார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.