Dragon: ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. அதன்பின் பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கிய படம்தான் டிரகான். கல்லூரி வாழ்க்கையை சரியாக கையாளாத ஒருவன் என்ன ஆகிறான் என்பதை யதார்த்தமாக சொல்லியிருந்தார். குறிப்பாக இளைஞர்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், நேர்மையாக முன்னேறுவதே எப்போதும் நிலைக்கும் என்கிற கருத்தையும் இந்த படத்தில் வலியுறுத்தியிருந்தார்.
லவ் டுடே ஹிட்டுக்கு பின் பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், ரசிகர்களின் கனவு கன்னியான கயாடு லோஹர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் இந்த படத்தில் கதாநாயகிகளாக நடித்திருந்தார்கள். மேலும், இயக்குனர் மிஷ்கின் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனதால் சூப்பர் ஹிட் அடித்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்நிலையில்தான், டிராகன் பட டீமை விஜய் நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள அஸ்வத் மாரிமுத்து ‘ஒரு நாள் நல்ல படத்தை கொடுத்து விஜய் சாரை சந்திப்பதற்காக கடுமையாக நான் உழைத்து வந்தது என்னுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு தெரியும். அவருடன் வேலை செய்ய முடியுமா என தெரியவில்லை.
ஆனால், அவரை பார்த்துவிட்டேன். நான் அவரின் தீவிர ரசிகர் என்பதால் என்னை பேச விட்டு எல்லோரும் அமைதியாக இருந்தார்கள். அவர் என்னை பார்த்தபோது என் கண்களில் நீர் கசிந்துவிட்டது. அவர் மீதான அதீத அன்பு அது. அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. என் ஃபிரண்ட் பிரதீப்புக்கு படம் பண்ண வந்தேன். சர்க்கிள் முடிந்துவிட்டது. ‘கிரேட் வொர்க் புரோ’ என அவர் சொன்னார். இது போதும்’ என உருகியிருக்கிறார்.