அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

0
76

அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ச்சியாக சுவரொட்டிகள் அடித்து விருப்பம் தெரிவித்து வரும் ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய் சில பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கின்றார்.

சினிமாவில் மட்டும் நடித்து வந்த ரஜினியை அரசியலில் குரல் கொடுக்க வைத்தது ஜெயலலிதா, அதுபோன்று திரைப்படங்களில் ஒரு சாக்லேட் ஹீரோவாக தெரிந்த நடிகர் விஜய் அவர்களை அரசியலுக்கு வழி மாற்றியது, திராவிட முன்னேற்ற கழகம் என்று தான் சொல்ல வேண்டும்.

ரசிகர் மன்றத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்க திமுக ஆட்சிக்காலத்தில் செய்யப்பட்ட தொந்தரவுகளை அடுத்து, நடிகர் விஜய் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார்.

மேலும் விஜய் ரசிகர் மன்றம் மூலமாக ஜெயலலிதாவிற்காக தேர்தல் பணிகளில் ஈடுபட்டார் விஜய்.

இதை தொடர்ந்து விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருவதற்கான விருப்பத்தை தெரிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆனாலும் எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் விஜயின் ரசிகர்கள் தலா 20 பேருக்கு அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கான தொகுதிகளை கேட்டார். ஆனால் ஜெயலலிதாவிற்கு இதைச் செய்ய மனமில்லாமல் போய்விட்டது.

ஆனால் திமுகவிற்கு தங்களுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே அதிமுகவுக்காக நடிகர் விஜயின் ரசிகர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனாலும் தேர்தல் நிறைவுற்ற உடனேயே ஜெயலலிதாவால் நடிகர் விஜய்க்கு நெருக்கடி தொடங்கியது.

அதிமுக ஆட்சியில் விஜய் திரைப்படங்கள் வெளியாவது பிரச்சனையாக இருந்தது.

இதன் காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு விஜய் ஆதரவு தெரிவித்தார். ஆனாலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மத்திய அரசை விமர்சனம் செய்தார் நடிகர் விஜய்.

இதன் மூலமாக வருமான வரித்துறை வாயிலாக நடிகர் விஜய்க்கு பிரச்சனை வந்தது அதன் பிறகு நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அனுமதி வழங்குவதிலும் மத்திய அரசு சற்று காலதாமதம் செய்தது. இதற்கிடையில் சர்க்கார் திரைப்படத்தில் ஜெயலலிதாவின் திட்டங்களை விமர்சனம் செய்த காரணத்தால் அதிமுக அரசின் கோபத்திற்கு நடிகர் விஜய் ஆளானார்.

இவ்வாறு முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துடனும் பிரச்சனையை வளர்த்து வைத்திருக்கின்றார் நடிகர் விஜய். இதனையடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு பிரச்சினை இருக்கின்றது. அதேநேரம் திமுக சார்பில் நடிகர் விஜய்க்கு சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

ஒரு சமயம் ரஜினி அரசியல் பிரவேசம் செய்வார் என்றால் விஜய் அவர்கள் திமுகவுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும் என எஸ் ஏ சந்திரசேகருடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

இதற்காகவே பல வலுவான வாக்குறுதிகளை எஸ் ஏ சந்திரசேகர் தரப்பில் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள். விஜய் அவர்களின் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றார்கள் என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டிய பலபேர் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தில் முக்கிய நிர்வாகிகளாக இருக்கிறார்கள். ஆகவே விஜய் அரசியலுக்கு வருவதை அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக பேச்சுக்கள் எழுந்த வண்ணம் இருகின்றனர். இந்நிலையில் அவரது இந்த ஆலோசனை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்ததாகவே இருந்தது என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

சட்டமன்ற தேர்தலில் தனது ரசிகர் மன்றம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாகவும், அதை தற்போது கூற முடியாது எனவும், தேர்தல் வரை காத்திருக்கும்படி அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் விஜய் தெரிவித்ததாக பேசிக்கொள்கிறார்கள்.

அது என்ன முடிவு என்று கேட்டால், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக்கு மாற்றாக உருவாகும் கூட்டணியை ஆதரிக்கும் ஒரு சக்தியாக விஜய் தரப்பு இருக்கும் என்று சொல்கிறார்கள்.